செய்தி வெளியீடுகள்
செய்தி வெளியீடுகள் 2022

செய்தி வெளியீடு எண். பொருள்
1/2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வேட்பு மனு தாக்கல் செய்வதை சிசிடிவி மூலம் பதிவு செய்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இன்று (05.01.2022) காணொலி காட்சி மூலம் ஆய்வு
2/2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு பயிற்சிகள் வழங்குதல், தேர்தலை அமைதியான முறையில் நடத்துதல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று (12.01.2022) பிற்பகல் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது
3/2022 தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரணத் தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் 19.01.2022 அன்று முற்பகல் 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
4/2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று 19.01.2022 நடைபெற்றது
5/2022 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார் இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் திருமதி. எ.சுந்தரவல்லி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும் இன்று (25.01.2022) தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது
6/2022 2022-ம் ஆண்டு, குடியரசு தின விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார் இ.ஆ.ப.,(ஓய்வு) அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
7/2022 அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் தேர்தல் அட்டவணை வெளியீடு
8/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் – 2022 – கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வெளியீடு
9/2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 29.01.2022 சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யலாம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு மற்றும் வாக்குப்பதிவு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
10/2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில், தேர்தல் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வுக்கூட்டம் இன்று (27.01.2022) பிற்பகல் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது
11/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்கள், கோவிட் – 19 வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து நிலைகளிலும் பின்பற்றியும் தேர்தலை அமைதியான முறையில் நடத்திட மாவட்டத் தேர்தல் பார்வையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம்.
12/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்-2022 28.01.2022 அன்று பெறப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்
13/2022 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் உரியவாறு பதவியில் இருந்து விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தால் ஏற்கெனவே வகிக்கும் பதவியில் தகுதி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம்
14/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022 29.01.2022 அன்று வரை பெறப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்
15/2022 தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 550 குழுக்கள் (8 மணி நேரத்திற்கு ஒரு குழு வீதம்) என மொத்தம் 1650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன
16/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022 31.01.2022 அன்று வரை பெறப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்
17/2022 தேர்தல் நடத்தை விதிகள் மீறல் - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பறக்கும் படையினரால் ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
18/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல், 2022-க்காக நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் விபரம் (38 மாவட்டங்கள் - பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட)
19/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022 01.02.2022 அன்று வரை பெறப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்
20/2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் தேர்தல் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாதிரி நடத்தை விதிகள் பின்பற்றுவது, வேட்புமனு தாக்கல் செய்த விவரம், கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் இன்று (2.2.2022) பிற்பகல் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
21/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022 02.02.2022 அன்று வரை பெறப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்
22/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் 699 மூத்த அதிகாரிகள் வட்டார பார்வையாளர்களாக (Block Observers) நியமிக்கப்பட்டுள்ளனர
23/2022 கோவிட்-19 பரவல் இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை
24/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022 03.02.2022 அன்று வரை பெறப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்
25/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் - 2022 தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு 04.02.2022 அன்று வரை 194 புகார்கள் வரப்பெற்றுள்ளன.
26/2022 நிர்வாக காரணங்களை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சி 10.02.2022 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
27/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் - சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களின் கைப்பேசி எண் விபரம்
28/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் பதவியிடங்களுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான 04.02.2022 வரை மொத்தம் 74416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
29/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு மாவட்டவாரியாக நியமிக்கப்பட்டுள்ள வட்டார பார்வையாளர்களின் (Block Observers) பெயர் மற்றும் கைப்பேசி எண் விபரங்கள்
30/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் - 2022 - தேர்தல் நடத்தை விதிகள் மீறல் - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பறக்கும் படையினரால் 30.01.2022 முதல் 04.02.2022 அன்று வரை ரூ.4,90,75,798/- மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
31/2022 தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் இரத்து செய்யப்பட்டுள்ளது
32/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 57,778 வேட்பாளர்கள் இறுதியாக போட்டுயிடுகின்றனர்
33/2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்க தடை
34/2022 தேர்தல் நடத்தை விதிகளின்படி, பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது ஆகியவை அனுமதிக்கப்படக்கூடாது
35/2022 தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் தேர்தல் பிரச்சார வாகன அனுமதி (VEHICLE PERMIT) தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும்
36/2022 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்படும் வாக்குச்சீட்டுகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டாம் மற்றும் மூன்றாம் சுழற்சி அடிப்படையில் வார்டுவாரியாக ஒதுக்கீடு செய்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வார்டுவாரியான வேட்பாளர் விவரங்கள் பதிவு உள்ளிட்ட தேர்தல் ஆயத்தப்பணிகள் குறித்த கலந்தாலோசனைக்கூட்டம் இன்று (09.02.2022) காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
37/2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19.02.2002 அன்று பொது விடுமுறை
38/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் கோவிட் 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தேர்தல் பரப்புரையை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளலாம்
39/2022 அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல், 2022 தொடர்பாக மாநில அளவில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பம் செய்து முன்அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.

மாவட்ட அளவில் மட்டும் வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் முன்அனுமதி பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.
40/2022 இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள மாதிரி நடத்தை விதிகளின்படி, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பாக வேட்பாளரின் தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்தல்
41/2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு (Booth Slip) உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை (EPIC), அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்
42/2022 தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 22.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று 268 மையங்களில், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது
43/2022 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வார்டுவாரியான பிரதான மற்றும் வாக்காளர் துணைப்பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது
44/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் பரப்புரை 17.02.2022 அன்று மாலை 6.00 மணியுடன் முடிவடைகிறது
45/2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பறக்கும் படையினரால் 29.01.2022 முதல் 10.02.2022 அன்று வரை ரூ.9,28,37,192/- மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
46/2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாகவும், நடமாடும் பாதுகாப்பு அலுவலர்கள், பறக்கும் படைகள், வாக்கு பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வதை உறுதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (16.02.2022) நடைபெற்றது
47/2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துதல், கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்தல், வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணுகை மையங்களில் சிசிடிவி பொருத்துதல் மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளின் தயார் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (16.02.2022) பிற்பகல் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது
48/2022 தேர்தல் நடத்தை விதிகளின்படி, பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகள், கொடிகள், சின்னங்கள் வரைதல் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டுவது ஆகியவை அனுமதிக்கப்படக்கூடாது. நீதி போராணை மனு எண்.W.P.No.3223/2022 மீதான மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நாள் 16.02.2022 நடைமுறைப்படுத்துதல்.
49/2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொலைக்காட்சிகள், வானொலிகள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் தேர்தல் பரப்புரை மற்றும் விளம்பரம் செய்ய இன்று (17.02.2022) மாலை 6.00 மணி வரையுடன் முடிவடைகிறது.
50/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் - 2022 தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு 16.02.2022 அன்று வரை 670 புகார்கள் வரப்பெற்றுள்ளன.
51/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் - 2022 குறித்த விவரங்கள்
52/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் - 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு 21.02.2022 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது
53/2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் தொடர்பாக (22.0.2022) அன்று நடைபெறும் 268 வாக்கு எண்ணுகை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளை கண்காணித்திடவும், காவல்துறையினரின் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையில்லா மின்சார வசதி, கணினி வசதிகள், வாக்கு எண்ணுகை அலுவலர்கள், காவல்துறையினருக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.
54/2022 தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in வாயிலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவினை 22.02.2022 செவ்வாய்கிழமை காலை 8.00 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளும் வகையில் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
55/2022 21.02.2022 அன்று 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு சதவீதம்
56/2022 கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி வார்டு எண்.4, வாக்குச்சாவடி எண்.4 AV மறு வாக்குப்பதிவு 24.02.2022 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது
57/2022 மறுவாக்குப்பதிவு நடைபெறும் கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களுக்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்வது
58/2022 மறு வாக்குப்பதிவு நடைபெற்ற கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி வார்டு எண்.4, வாக்குச்சாவடி எண். 4AV சேர்த்து, மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சிக்கான வார்டுவாரியான அனைத்து வேட்பாளர்களின் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சிகள், சுயேட்சைகள் பெற்ற வாக்கு சதவீதம் ஆணைய இணைதளத்தில் வெளியீடு
59/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை உரிய அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
60/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வது குறித்தும் மாநகராட்சிகளுக்கான மேயர் / துணை மேயர் மற்றும் நகராட்சி / பேரூராட்சிகளுக்கான தலைவர் / துணைத் தலைவர் தேர்தல் நடத்துவது குறித்தும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செய்தி குறிப்பு
61/2022 நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் 2022 - கட்சிவாரியான மறைமுகத் தேர்தல் முடிவு குறித்த விவரங்கள்
62/2022 62 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்கள் 26.03.2022 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது
63/2022 நிலைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், வார்டுகள் குழு தலைவர், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள், நியமனக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்குழு உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல்கள் 30.03.2022 மற்றும் 31.03.2022 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது
64/2022 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு நகராட்சி / பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கூட்டம் பாதுகாப்பான முறையில் நடத்துவது குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (21.03.2022) பிற்பகல் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
65/2022 உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்கள் அட்டவணை
66/2022 ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் - 2022 தேர்தல் முடிவுகள் விவரம்
67/2022 2022-ம் ஆண்டு, சுதந்தர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிகுமார் இ.ஆ.ப.,(ஓய்வு) அவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
செய்தி வெளியீடுகள் 2020