ஆணையத்தின் அமைப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அமைப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 243-K மற்றும் சட்டக்கூறு 243-ZA –ன்கீழான அரசியலமைப்பு சார்ந்த அதிகார அமைப்பே மாநில தேர்தல் ஆணையமாகும். மேலும், இது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 239 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998 பிரிவு 5-ன் கீழ் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இந்திய அரசியலமைப்பின் 73-வது மற்றும் 74-வது திருத்தச் சட்டங்கள், 1992-ன் கீழ் நிறுவப்பட்ட சுதந்திரமான, தன்னாட்சியுடைய ஒரு சட்டபூர்வ அமைப்பான  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்களின் தலைமையில் இயங்கி வருகிறது. 

இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 243-K மற்றும் அதனுடன் படிக்கப்பட்ட 243-ZA-யின்படி ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அனைத்துத் தேர்தல்களும் மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு, வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழேயே நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது, 1994-ஆம் ஆண்டு ஜுலை 15-ந்தேதி தோற்றுவிக்கப்பட்டது.

*****