தேர்தல்களுக்கான பண்டையகால கல்வெட்டு ஆதாரங்கள்

வைகுந்த பெருமாள் கோவில், உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம்

 

வைகுந்த பெருமாள் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் கிராம நிர்வாகத்தை விளக்கும் கல்வெட்டுகள்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வைகுந்த பெருமாள் கோயிலில் காணப்படும் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், சபைகள் மற்றும் செயற்குழுக்களின் மூலம் செயல்படுத்தப்பட்ட கிராம நிர்வாக அமைப்பை விவரிக்கிறது.

பண்டைக்காலத்திலேயே கிராமங்கள் வார்டுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வார்டிலும் வசித்தவர்கள் அந்தந்த வார்டுகளின் மக்கள் பிரதிநிதிகளை "குடவோலை முறை" என்றழைக்கப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்தனர் என்பதை அறியும்போது வியப்பாக உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான நன்கு வடிவமைக்கப்பட்ட நடத்தை நெறிகள் இருந்தன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறுதியிட்ட தகுதிகளும் தகுதியின்மைகளும் வரையறுக்கப்பட்டிருந்தன.

*****